சீன ராணுவத்தின் கூட்டு இராணுவப் பயிற்சிகள்
2022-12-25 20:49:49

டிசம்பர் 25ஆம் நாள் சீன மக்கள் விடுதலை படையின் கிழக்கு மண்டலப் பிரிவு, தைவான் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் கூட்டுப் போர் தயார்நிலை பாதுகாப்பு ரோந்து மற்றும் கூட்டுச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவும் தைவான் பிரதேசமும் கள்ளத்தனமாக கூட்டுச் சேர்த்து பிரதேச நிலைமையை மோசமாக்கும் செயலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உறுதியான பதிலடியாக இது திகழ்கின்றது. தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, தேசிய இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பாதுகாப்போம் என்று கிழக்கு போர் மண்டலத்தின் செய்தித் தொடர்பாளரும் தரைப்படையின் மூத்த ஆணையாளருமான ஷி யி கூறினார்.