தவறான மற்றும் ஆபத்தான பாதையில் செயல்படும் அமெரிக்கா
2022-12-26 11:35:17

2023ஆம் நிதியாண்டுக்கான தேசியப் பாதுகாப்பு அங்கீகார மசோதாவை அமெரிக்கா சட்டமாக அங்கீகரித்துள்ளது. சீனாவை இழிவு செய்யும் நிறைய அம்சங்களைக் கொண்டுள்ள இச்சட்டம், தைவான் பிரிவினைவாதிகளுக்கு தவறான தகவல்களை வழங்கும் ஒன்றாகும்.

அமெரிக்காவின் உள்நாட்டு சட்டமான இச்சட்டம், அந்நாட்டின் உள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இச்சட்டம் சர்வதேசச் சட்டம் போல் எழுதப்பட்டு, சீனா அச்சுறுத்தலாக  அவதூறு பரப்பி, சீனாவின் உள் விவகாரத்தில் தலையீடு செய்துள்ளது. அதோடு, சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு 1000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியையும் 200 கோடி அமெரிக்க டாலர் ராணுவ கடனையும் 5 ஆண்டுகாலத்திற்குள் வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது, தைவான் நீரிணை நிதானத்தைச் சீர்குலைத்து, பாதுகாப்பு இடர்பாட்டை அமெரிக்கா உருவாக்கி வருகின்றது என்பதை நிரூபிப்பதாகும்.

ஜோ பைடன் அரசு ஆட்சி புரிந்த இரு ஆண்டுகளில் தைவானுக்கு 7ஆவது ஆயுத விற்பனை 15 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சட்டத்தில் தைவானுக்கான ஆயுத உதவியை அதிகரிப்பது உள்ளிட்ட எதிர்மறை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சட்டம், ஒரே சீனா கோட்பாட்டையும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளையும் கடுமையாக மீறியுள்ளதோடு, அமெரிக்க அரசு சீன அரசுக்கு அளித்த அரசியல் வாக்குறுதியையும் மீறியுள்ளது.  

தைவான் சீனாவின் தைவான் மட்டுமே. தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது சீனாவின் உள் விவகாரமாகும். இப்பிரச்சினையில், பிற நாடுகள் தலையீடு செய்யக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.