சீனாவின் மிகப் பெரிய எரிவாயு வயலின் உற்பத்தி அளவு 3000 கோடி கன மீட்டர்
2022-12-26 15:54:35

டிசம்பர் 26ஆம் நாள் வரை சீனாவின் எர்தோஸ் வடிநிலத்தின் சாங்ட்சிங் எண்ணெய் வயலிலுள்ள சுலிகே எரிவாயு வயலின் ஆண்டு உற்பத்தி அளவு 3004 கோடி கன மீட்டரை எட்டியது.

சுலிகே எரிவாயு வயல், தற்போது சீனாவின் மிகப் பெரிய எரிவாயு வயலாகும். அதன் தினசரி உற்பத்தி அளவு 10 கோடி கன மீட்டரைத் தாண்டி, ஆண்டுக்கு இயற்கை எரிவாயு உற்பத்தி 3000 கோடி கன மீட்டரை எட்டியது. இதுவரை அதன் மொத்த உற்பத்தி அளவு 30,000 கோடி கன மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.