சமூக வலைதளங்களை வழிநடத்திய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம்
2022-12-26 17:28:13

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த வாரியங்கள் சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதப் பொருட்களை வழிநடத்தியதாக அந்நாட்டின் ஒரு சுதந்திர கள ஆய்வு இணையம் அண்மையில் சுட்டுரை நிறுவன ஆவணங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது. குறிப்பாக, அவை மத்திய கிழக்கு மக்களிடையில் போலியான தகவல்களைப் பரப்பி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு நன்மை பயக்கும் நோக்கமுடைய செய்திகளைக் கூறி வருகின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சமூக வலைதளங்களின் மூலம் தவறான செய்திகளைப் பரப்புரை செய்து,பொதுக் கருத்துக்களைத் தவறான வழிக்குக் கொண்டு செல்லும் இன்னொரு காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.