நேபாளத்தில் புதிய தலைமையமைச்சர் நியமனம்
2022-12-26 16:27:51

நேபாள அரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி அம்மையார் 25ஆம் நாள் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டாவைப் புதிய தலைமை அமைச்சராக நியமித்தார்.

முன்பு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியம்-லெனினிசத்தின் தலைவர் கட்கர் பிரசாத் சர்மா ஓலியுடன் பிரசண்டா கலந்தாய்வு நடத்தி, கூட்டணி அரசை அமைக்க முடிவெடுத்தார் என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தேவ் குருன் தெரிவித்தார்.

சுழற்சி முறையில் தலைமை அமைச்சர் பதவி வகிப்பதென இரு கட்சியினரும் ஒப்புக் கொண்டனர். இதன்படி, பிரசண்டா தலைமை அமைச்சராக 2.5 ஆண்டுகாலம் பதவி வகித்த பிறகு, ஓலி தலைமை அமைச்சராகப் பதவியேற்பார்.

இப்புதிய கூட்டணி அரசில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-மாவோயிசம், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியம்-லெனினிசம் முதலிய ஏழு அரசியல் கட்சிகள் அடங்கியுள்ளன.