2023ஆம் ஆண்டு சீன பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை
2022-12-27 19:00:59

சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் யாங்ஃபென் 27ஆம் நாள் கூறுகையில், சீனாவிலுள்ள 160 அன்னிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வணிகச் சங்கங்களிடம் சீன சர்வதேச வர்த்தகச் சங்கம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி 2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று 99.4 விழுக்காட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும், சீனாவிலுல்ள முதலீட்டை அதிகரிப்பதாக 98.7 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

சீன பொருளாதாரத்தின் நெகிழ்திறன் அதிகம். சந்தை உள்ளாற்றல், தொழிற்துறைத் தொகுதி, அடிப்படை வசதி, வணிகச் சூழல் முதலிய துறைகளில் சீன பொருளாதாரத்துக்கு வலிமையான போட்டியாற்றல் உள்ளது என்றும் விசாரணைபடுத்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்டன.