சீன வேளாண் துறையிலுள்ள உயர் தொழில் நுட்பங்கள்
2022-12-27 11:32:40

அறிவியல் தொழில் நுட்பத்தையும் சீர்திருத்தத்தையும் பயன்படுத்தி, வேளாண்மை வல்லரசு ஆக்கப்பணியை வலுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நிறைவுற்ற சீன மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பம் முன்னேற்றத்தின் முக்கிய அம்சமாக, இவ்வாண்டில், நவீன தகவல் தொழில் நுட்பம் வேளாண் துறைக்கு பங்காற்றி, பொலிவுறு வேளாண் துறையின் வளர்ச்சியை விரைவுப்படுத்தி வருகிறது.

செயற்கைக்கோள் தொலை உணர்வறிதல், பெய்டோவ் புவியிடங்காட்டி, மதிநுட்பமான விவசாய இயந்திர சாதனங்கள் முதலியவற்றைக் கொண்ட பண்ணைகள் சீனாவின் பல்வேறு இடங்களில் கட்டியமைக்கப்பட்டுள்ளன.