சீனாவுக்கு வருபவர்களுக்கு நியூக்லிக் அமில சோதனை மற்றும் தடைக்காப்பு நீக்கம்
2022-12-27 10:18:40

புதிய ரக கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு 2ஆவது வகையின் 2ஆவது நிலை கட்டுப்பாடு பற்றிய ஒட்டுமொத்த திட்டத்தை சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை டிசம்பர் 26ஆம் நாள் வெளியிட்டது. சீன மற்றும் வெளிநாட்டு மக்களின் பயணத்துக்கான கட்டுப்பாடு மேம்படுத்தப்படும் என்று இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவுக்கு வருகை தர விரும்பும் நபர் பயணத்துக்கு முந்தைய 48 மணிநேரத்துக்குள் நியூக்லிக் அமில சோதனை மேற்கொண்டு, எதிர்மறையான முடிவுடன் சீனாவுக்கு வர முடியும். தங்கள் நாட்டிலுள்ள சீனத் தூதரகத்துக்கு உடல்நலக் குறியைப் பெற விண்ணப்பம் செய்ய தேவையில்லை. சீனாவுக்குள் நுழைந்த பிறகு, அனைவருக்குமான நியூக்லிக் அமில சோதனையும், தடைக்காப்பு நடவடிக்கையும் நீக்கப்பட்டுள்ளன. உடல்நிலை மற்றும் சுங்கத்துறையின் வழக்கமான சோதனை முடிவு இயல்பாக இருப்பவருக்கு, சமூக நுழைவுக்கான அனுமதி அளிக்கப்படும். உற்பத்தியை மீட்டெடுப்பது, வணிக அலுவல் செய்வது, கல்வி பயில்வது, குடும்பத்தினருடன் ஒன்று சேர்வது உள்ளிட்ட காரணங்களாக சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வசதியான விசா சேவை வழங்கப்படும். மேலும், நீர் மற்றும் தரைவழி நுழைவாயில் மூலமான பயணியர் போக்குவரத்தும், சீன குடிமக்களின் வெளிநாட்டுப் பயணமும் படிப்படியாக மீட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.