2021ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு
2022-12-27 11:14:11

2021ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கான இறுதி அறிக்கையைச் சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் டிசம்பர் 27ஆம் நாள் வெளியிட்டது.

இவ்வறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 14 லட்சத்து 92 ஆயிரத்து 370 கோடி யுவானாகும். முதற்கட்ட கணக்கீட்டு மதிப்பை விட இது 55 ஆயிரத்து 670 கோடி யுவான் அதிகம். விலை மாற்றத்தை பொருட்படுத்தாமல், 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 8.4 விழுக்காடு அதிகமாகும்.