2037-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா
2022-12-27 17:08:14

பிரிட்டனின் சிந்தனைக் கிடங்கான பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2037ஆம் ஆண்டுக்குள், இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை இந்தியாவின் மின்ட் செய்தித் தாள் 26ஆம் நாள் மேற்கோள்காட்சி செய்தி ஒன்று வெளியிட்டது.

அதில், 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் 8293 அமெரிக்க டாலராகும். இதனைப் பார்த்தால் இந்தியா இன்னும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் வரிசையில் உள்ளது. ஆனால், 2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8.7 விழுக்காடு அதிகரித்து, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறியது. அடுத்த 5 ஆண்டுகளில் இது சராசரியாக 6.4 விழுக்காடு என்ற நிலையை நிலைநிறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.