2022ஆம் ஆண்டு திபெத்தில் பெரும் முன்னேற்றம்
2022-12-28 11:00:03

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் திபெத் தன்னாட்சி பிரதேச கமிட்டி டிசம்பர் 27ஆம் நாள் நடத்திய பொருளாதாரப் பணிக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2022ஆம் ஆண்டு, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது, பொருளாதாரத்தை நிதானப்படுத்துவது, பாதுகாப்பான வளர்ச்சியை மேற்கொள்வது ஆகிய கொள்கைகளைத் திபெத் செயல்படுத்தி, பல்வேறு சவால்களை ஆக்கமுடன் சமாளித்து, பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. முதலீடு, மக்களின் வருமானம், நிதி செலவு, மக்களின் வாழ்வாதாரத்துக்கான ஒதுக்கீடு, மேம்பாட்டைக் கொண்ட தொழில்கள் ஆகிய துறைகளில் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

மேலும், திபெத்தில் நிதானமான பொருளாதார வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. முக்கிய திட்டப்பணிகள் உயர்வேகமாக முன்னேற்றப்படுகின்றன. தனிச்சிறப்புடைய தொழில்கள் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கைச்சூழல் சீரான நிலையில்  பேணிக்காக்கப்பட்டு வருகிறது. எல்லை பாதுகாப்பு முன்னேற்றப்பட்டு வருகிறது. சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி ஆழமாக்கப்பட்டு வருகிறது.