சீனாவின் உயர் நிலை அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு முன்னேற்றம்
2022-12-28 11:42:45

2022 ஆய்வு முன்னணி, 2022 ஆய்வு முன்னணியில் சுறுசுறுப்பான துறைகள் மற்றும் தலைமை நாடுகள் ஆகிய 2 அறிக்கைகளை சீன அறிவியல் கழகத்தின் அறிவியல் தொழில் நுட்ப நெடுநோக்கு ஆலோசனை ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 27ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன. இவ்வறிக்கைகளின் படி, 2022ஆம் ஆண்டில் 11 முக்கிய அறிவியல் துறைகளில் அமெரிக்கா மிகத் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்காவை அடுத்து சீனா இரண்டாவது இடத்திலும்,  பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே 3 மற்றும் 4ஆவது இடத்திலும் இருக்கின்றன. இந்த 11 துறைகளில் 110 சூடான முன்தளங்களிலும் 55 புதிய முன்தளங்களிலும் சீனா முதலிடம் பெற்ற எண்ணிக்கை 52 ஆகும். குறிப்பிட்ட குறியீட்டின்படி, வேளாண் அறிவியல், தாவரவியல் மற்றும் விலங்கியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், வேதியியல் மற்றும் மூல பொருள், இயற்பியல் ஆகிய துறைகளில் சீனா முதலிடத்தில் இருபது குறிப்பிடத்தக்கது.