மனித சோதனை—அமெரிக்காவில் மனித உரிமை மீறல்
2022-12-28 16:38:46

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த நூற்றாண்டின் 60 மற்றும் 70-களில் சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள சிறைச்சாலையில் குறைந்தது 2,600 கைதிகள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளைச் செலுத்துவது உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மனித உடம்லில் சிபிலிஸின் தீங்குகளை அறிந்து கொள்ளும் விதம் 1932 முதல், அமெரிக்கப் பொது சுகாதாரத் துறை அலபாமா மாநிலத்தில் ஏறக்குறைய 400 ஆப்பிரிக்க-அமெரிக்க ஆண்களிடையில் ரகசியமாக ஆய்வு செய்தது. உண்மையில் நோயாளிக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. 1972ஆம் ஆண்டில் செய்தி ஊடகங்களால் வெளியிடப்பட்ட வரை இந்தச் சோதனை நிறுத்தப்படவில்லை என்று இந்தியாவின் திஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சொந்த நாட்டிலுள்ள மோசமான மனித உரிமை பிரச்சினையைப் பொருட்படுத்தாமல் மற்ற நாடுகளின் மனித உரிமை நிலைமை பற்றி விமர்சிக்கிறது. படிப்படியாக வெளியிடப்பட்ட அதன் மனித சோதனை மோசடிகள் மூலம், அமெரிக்காவின் உண்மையான முகத்தை உலக மக்கள் அறிந்து கொள்வார்கள்.