சீனாவில் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்
2022-12-28 20:57:41

மேற்கத்திய ஊடகங்கள் சில சீனாவின் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கை சரிசெய்யப்பட்டது குறித்து விமர்சித்ததுடன்,  தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனா தோல்வியடைந்து விட்டது என்று கூறின.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக மக்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதுடன் தொற்று நோய் பரவலின் மிக மோசமான நிலைமையைச் சீனா வெற்றிகரமாகத் சமாளித்துள்ளது என்றார்.

உலகளவில் ஒப்பிடும்போது சீனாவில் நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகும். தற்போது தொற்று நோய் பரவல் நிலைமை எதிர்பார்ப்பிலும் கட்டுப்பாட்டிலும் உள்ளது. எடுத்துக்காட்டாக பெய்ஜிங் மாநகரில் தொற்றுநோய் பரவல் உச்சத்தை எட்டிய பிறகு, உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.