சீனாவில் நடைமுறைக்கு ஏற்ற தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை
2022-12-28 11:03:25

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் முதல், புதிய ரக கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கை ஏ வகையின் ஏ நிலையிலிருந்து பி வகையின் பி நிலைக்கு மாற்றப்பட உள்ளது. அப்போது, இவ்வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தடைக்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.  அதோடு, சீனாவில் நுழையும் மக்கள் மற்றும் பொருட்களின் மீது தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. இது, கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கையின் மேம்பாடு ஆகும். இது, வைரஸ் உருமாற்றம், பரவல் நிலைமை, கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அனுபவம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, அறிவியல் மற்றும் துல்லியமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். மனிதரின் உயிர் பாதுகாப்பை முதலிடத்தில் வைக்கும் கோட்பாட்டை இது பின்பற்றியுள்ளது.

உலகோடு ஒப்பிடுகையில், சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பொருளாதார வளர்ச்சி மற்றும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் சீனா நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.