அமைதி உச்சி மாநாடு நடத்த வேண்டுமென உக்ரைன் முன்மொழிவு
2022-12-28 17:29:52

உக்ரைன் நெருக்கடிக்கு முடிவு கொண்டு வரும் விதம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஐ.நா “அமைதி உச்சி மாநாட்டை” நடத்த வேண்டுமென உக்ரை அரசு விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். அதேசமயம், இம்மாநாட்டில் ரஷியா பங்கேற்காது என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷியாவின் பங்களிப்பு இல்லாமல் உக்ரைன் தொடர்பான “அமைதி உச்சி மாநாடு” சாத்தியமாகாது என்று ரஷியா தெரிவித்துள்ளது.  அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டால் ரஷிய-உக்ரைன்  நெருக்கடியைச் சமாளிக்கத் ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரெஸ் தயாராக உள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.