ரஷிய - உக்ரைன் மோதலிலிருந்து பயன் பெற்ற மேலை நாடுகள்
2022-12-29 12:04:19

எகிப்தின் ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, ரஷிய-உக்ரைன் மோதல் தொடங்கியது முதல் தற்போது வரை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் இம்மோதலைத் தூண்டிவிட்டு, உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேலை நாடுகளின் இராணுவத் தொழில் நிறுவனங்கள் அதிக முன்பதிவுப் படிவங்களைப் பெற்று, இம்மோதலிலிருந்து பெரும் பயன்களைப் பெற்றுள்ளன.

ஈயூஅப்சர்வர் என்னும் ஐரோப்பிய ஊடகம் முன்பு வெளியிட்ட தகவலில், ரஷிய-உக்ரைன் மோதலை, லாபம் நிறைந்த வணிக வாய்ப்பாக, மேலை நாடுகளின் இராணுவத் தொழில் நிறுவனங்கள் கருதுகின்றன. பாதுகாப்பை வழங்கக்கூடிய முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளிகள் போல் அவை பாசாங்கு செய்து பொருளாதார இலாபங்களைப் பெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.