2023ஆம் ஆண்டு அமைதியான ஆண்டாகத் திகழ வேண்டும் - குட்ரேஸ் விருப்பம்
2022-12-29 12:15:43

ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் டிசம்பர் 28ஆம் நாள் 2023ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு உரையை நிகழ்த்தினார்.

தன்னுடைய உரையில், 2022ஆம் ஆண்டில் போர், காட்டுத்தீ, வறட்சி, வறுமை, பசி ஆகிய காரணங்களால் உலகின் பல்வேறு இடங்களில் 10 கோடி மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்நிலையில் 2023ஆம் ஆண்டு உலகிற்கு அமைதியைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், நாம் ஒருவருக்கு ஒருவர் அமைதியை அளிக்கும் வகையில் பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சையைத் தீர்த்து, இயற்கையுடன் இணைந்து அமைதியாக வாழ்ந்து, தொடரவல்ல உலகத்தை கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, 2023ஆம் ஆண்டில் அமைதியை நமது செயல் மற்றும் பேச்சின் முக்கிய அம்சமாக கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த குட்ரேஸ், 2023ஆம் ஆண்டானது, நமது வாழ்க்கை, குடும்பம், உலகம் உள்ளிட்ட அனைத்துக்குமான அமைதியான ஆண்டாகத் திகழ நாம் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.