நோய் தடுப்பு நடவடிக்கைகளைச் சரிப்படுத்துவது நடைமுறைக்கேற்ற செயல்பாடு:சீனா
2022-12-29 18:42:22

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீனா சரிப்படுத்துவதற்கான காரணம் நோய் பரவல் கட்டுப்பாட்டுக் கருத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் என்றும் மக்களின் உயிர் பாதுகாப்பில் சீனா கவனம் செலுத்தவில்லை என்றும் சில மேலை நாடுகளின் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

இத்தகைய செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள் வாங் வென்பின் 29ஆம் நாள் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் திரிபின் பரவல் மற்றும் நச்சுத் தன்மை குறைவு, சீனாவில் மருத்துவ சிகிச்சை, பரிசோதனை மற்றும் தடுப்பூசித் திறன் உயர்வு ஆகியவற்றுடன், கரோனா தடுப்பு தொடர்பான மேலாண்மை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேவையான செயல்பாடாகும். நோய் தடுப்பையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவாகும். மிகப் பரந்த மக்களின் அடிப்படை நலன்கள் இதனால் பேணிக்காப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களே முதன்மை, உயிர் பாதுகாப்பே முதன்மை என்ற கோட்பாட்டை சீனா எப்போதும் கடைபிடித்து வருகின்றது. அனைத்து மக்களின் ஒற்றுமை மற்றும் முயற்சிகளுடன் தொற்று நோயைத் தோற்கடித்து ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.