18ஆவது சீன (ஷென்ட்சென்) சர்வதேச பண்பாட்டுத் தொழில் பொருட்காட்சி துவக்கம்
2022-12-29 15:20:07

18ஆவது சீன (ஷென்ட்சென்) சர்வதேச பண்பாட்டுத் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 28ஆம் நாள் பிற்பகல் ஷென்ட்சென் நகரில் துவங்கியது. புத்தாக்க ஆற்றல், எண்ணியல் மயமாக்க நெடுநோக்கு, சீனத் தேசத்தின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாட்டுப் பரவல் மற்றும் வளர்ச்சி, பண்பாடு மற்றும் சுற்றுலாவின் ஒன்றிணைப்பு, பண்பாட்டு நுகர்வு, வெளிநாட்டு பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்ட இப்பொருட்காட்சி, பயனுள்ள கண்காட்சி மற்றும் பரிவர்த்தனை தளமாகத் திகழ்கிறது.

சுமார் 3400 பண்பாட்டு அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நேரடியாகவும் இணையவழியாகவும் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இப்பொருட்காட்சிக்கான ஏற்பாட்டு தரப்புகளில் ஒன்றாக தேசிய பதிப்புரிமை நிர்வாகம் முதன்முறை சேர்க்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில், பண்பாட்டு வாழ்க்கையை மேம்படுத்தும் பதிப்புரிமை என்ற கண்டாட்சி இப்பொருட்காட்சியில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.