கொசோவோ விவகாரத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்
2022-12-29 16:26:40

கொசோவோ விவகாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்புகளும் இயன்ற அளவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் 28ஆம் நாள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பதற்றமான நிலைமைக்கு அரசியல் முறை மூலம் தீர்வு காணும் விதம், மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்றும் கூறப்பட்டது.

2008 பிப்ரவரியில், கொசோவோ ஒரு சார்பாக தனது சுதந்திரத்தை அறிவித்தது. ஆனால், கொசோவோ மீதான இறையாண்மையைக் கடைப்பிடிப்பதில் செர்பியா ஊன்றி நிற்கின்றது. அண்மையில், செர்பிய இனத்தைச் சேர்ந்த கொசோவோவின் முன்னாள் காவற்துறையினர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை நிகழ்ந்தது. கொசோவோவின் வடக்குப் பகுதியில் பதற்ற நிலைமை தீவிரமடைந்தது.