உலகளவில் மிகப் பெரிய நீரேற்றித் தேக்கல் மின் நிலையக் கட்டுமானம் துவக்கம்
2022-12-29 12:48:32

சீனாவின் யாங் லோங் ஆற்றின் மேல் அமைந்துள்ள கலப்பின நீரேற்றித் தேக்கல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணி டிசம்பர் 29ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்திலும் உலகளவில் மிகப்பெரிய அளவிலும் மேற்கொள்ளப்பட்ட கலப்பின நீரேற்றித் தேக்கல் மின் நிலையத் திட்டப்பணியாக இந்நிலையம் திகழ்கிறது. மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பசுமையான மாற்றத்தையும் புதிய ரக ஆற்றல் முறைமையின் கட்டுமானத்தையும் விரைவுபடுத்தும் நெடுநோக்குத் திட்டத்துக்கும் இது முக்கிய நடவடிக்கையாகும். நீர், காற்று, ஒளி மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றின் பன்னோக்கு வளர்ச்சிக்கு இது முன்மாதிரியாக பங்காற்றும்.

கட்டுமானம் முடிவடைந்த பிறகு, இந்நிலையமானது ஆண்டுதோறும் 28 ஆயிரம் கோடி கிலோவாட் தூய்மையான மின்னாற்றல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 8 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரியின் பயன்பாட்டையும், 23 கோடி டன் கரியமில வாயு வெற்றியத்தைக் குறைப்பதற்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.