சீனாவின் வளர்ச்சி மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை
2022-12-30 16:36:40

சிஎன்பிசி எனும் அமெரிக்காவின் நுகர்வோர் செய்தி மற்றும் வணிகச் சேனல் 26ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் கோவிட் 19 நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை புதிய கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு உச்சத்தை எட்டி குறைந்து வருகின்றது. அடுத்த ஆண்டு புதிதாக வளர்ந்து வரும் சந்தைக்கு சிறந்த வளர்ச்சி வாய்ப்பு உண்டு என்று பொருளாதார ஆலோசகர்களும், வால் ஸ்டீரிட் முதலீட்டாளர்களும் கருத்து தெரிவித்தனர்.

2023ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மீதான மதிப்பீடு 5 சதவீத்த்திலிருந்து 5.4 சதவீதமாக உயரும் என்று மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

 சீனாவின் எல்லை திறப்பு, அடுத்த ஆண்டில் சந்தையில் நிகழும் முக்கியமான நிகழ்வாகும். சுற்றுலா துறையைத் தவிர, பொருளாதார நடவடிக்கை மற்றும் சந்தை வளர்ச்சிக்கு இது ஆக்கப்பூர்வ சமிக்கை என்று நியூஎட்ஜ் வெல்த் நிறுவனத்தின் முதலீட்டுத் துறை மேலாளர் பென் எமோன்ஸ் சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார.