சீனா மற்றும் ஆர்சிஇபி உறுப்பு நாடுகளின் வர்த்தகம் அதிகரிப்பு
2022-12-30 16:37:31

பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கை(ஆர்சிஇபி), கடந்த ஜனவரி முதல் நாள் அமலுக்கு வந்த பிறகு, சீனாவுக்கும் ஆர்சிஇபிவின் இதர உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில், சீன-ஆர்சிஇபி உறுப்பு நாடுகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 11 இலட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 7.9 விழுக்காடு அதிகமாகும். தவிரவும், இது சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி தொகையில் 30.7 விழுக்காடு என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.