2022ஆம் ஆண்டு முக்கியமான சீன மற்றும் உலகச் செய்திகள்
2022-12-30 15:09:04

சீன ஊடகக் குழுமம் 2022ஆம் ஆண்டின் முதல் 10 முக்கியமான சீன செய்திகளையும் முதல் 10 முக்கியமான உலகச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது.

முக்கியமான சீன செய்திகளில் முதல் 3 செய்திகள் பின் வருமாறு—

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. சோஷலிச நவீன நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைக்கும் புதிய பயணத்தில் சீனா காலடி எடுத்து வைத்துள்ளது. ஷி ச்சின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2022ஆம் ஆண்டு சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு ஒரு கோடியே 20 இலட்சம் கோடி யுவானைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன பொருளாதாரம், உலக பொருளாதார மீட்சிக்கு வலிமைமிக்க உந்து சக்தியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

8 ஆண்டுகள் தொடர்ந்து 65 கோடி டன்னுக்கு மேலான சீனாவின் தானிய உற்பத்தியளவு 2022ஆம் ஆண்டில் புதிய பதிவை எட்டியுள்ளது .

முக்கியமான உலகச் செய்திகளில் முதல் 3 செய்திகள் பின் வருமாறு—

ஆர்சிஇபி என்ற பிரதேச பன்முக பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியது.

ரஷியாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் தடை நடவடிக்கை மேற்கொண்டதால் உக்ரைன்-ரஷிய மோதல் ஏற்பட்டது.