சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து பரிமாற்றம்
2022-12-31 18:20:55

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங். ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின் ஆகியோர், புத்தாண்டுக்கான நல்வாழ்த்து செய்திகளை ஒருவருக்கொருவர் அனுப்பினர்.

சீன அரசு மற்றும் மக்கள் சார்ப்பில் ஷிச்சின்பிங் கூறுகையில், அரசுத் தலைவர் புத்தினுக்கும் ரஷிய மக்களுக்கும் உள்ளார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். 2022ஆம் ஆண்டு, ஒரு அசாதாரண ஆண்டாகும். இடைவிடாமல் மாறி வரும் சர்வதேச நிலைமையையும் உலகளவில் தொடர்ச்சியான தொற்று நோய் பரவலையும் எதிர்கொண்டு, சீன மற்றும் ரஷிய உறவு சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி வருகிறது. இவ்வாண்டில், இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நிலையாக முன்னேறி, எரியாற்றல், முதலீடு, ஒன்றுக்கொன்று தொடர்பு மற்றும் திறப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில், நான் அரசுத் தலைவர் புத்தினுடன் இணைந்து, இரு தரப்பும் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பையும் பல்வேறு துறைகளிலான நடைமுறை ஒத்துழைப்பையும் ஆழமாக்குவதை வழிக்காட்ட பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் புத்தின் கூறுகையில், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் உயர் நிலைக்கு கொண்டு சென்று, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.