ஐ.நாவில் சீன முயல் ஆண்டுக்கான சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு
2022-12-31 16:24:38

சீனப் பாரம்பரிய புத்தாண்டை வரவேற்கும் வகையில், ஐ.நா அஞ்சல் நிர்வாகம் ஜனவரி 20ஆம் நாள் முயல் ஆண்டுக்கான சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடவுள்ளது. 

2010ஆம் ஆண்டு மே முதல் சீனப் பாரம்பரிய ஆண்டைக் குறிக்கும் விலங்குகள் பற்றி ஐ.நா சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிடத் துவங்கியது. 2021ஆம் ஆண்டு வரை முதல் சுற்று 12 விலங்குகள் பற்றிய அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. நடப்பு முயல் ஆண்டுக்கான அஞ்சல் தலை 2ஆவது சுற்றின் 2ஆவது அஞ்சல் தலையாகும்.

ஒவ்வொரு தாளிலும் 1.4 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 10 அஞ்சல் தலைகள் இடம்பெறுகின்றன. முழு தாளின் விற்பனை விலை 16.95 டாலராகும்.