கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட இலக்குகளை நிறைவேற்ற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்:ஷி ச்சின்பிங்
2022-12-31 16:56:56

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது தேசிய மாநாட்டின் முதலாவது அமர்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் வழங்கிய உரையை சியூ ஷ் எனும் இதழ் ஜனவரி முதல் நாள் வெளியிடவுள்ளது.

20ஆவது தேசிய மாநாடு, புதிய யுகத்தில் கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி, 2ஆவது நூற்றாண்டு இலக்கை நனவாக்குதல் ஆகியவற்றுக்கு முன்னேற்ற திசையையும் செயற்பாட்டு வழிகாட்டியையும் உறுதி செய்துள்ளது என்று இதில் தெரிவிக்கப்பட்டது.