சீன விண்வெளி நிலையத்தில் பன்னாட்டு ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் துவங்கவுள்ளன
2022-12-31 16:59:35

பூமிக்கு 400 கிலோமீட்டர் உயரத்தில் இயங்கி வரும் சீன விண்வெளி நிலையம் உலக அறிவியல் ஆய்வாளர்களை வரவேற்கவுள்ளது. இதுவரை, சீன விண்வெளி நிலையத்தில் பணி செய்வதற்காக பல நாடுகள் விண்ணப்பித்துள்ளன. தொடர்புடைய வெளிநாட்டு விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான ஆயத்த பணிகளை சீனா மேற்கொள்ளத் துவங்கியுள்ளது.

மேலும், ஐ.நா புறவெளி விவகார அலுவலகம், ஐரோப்பிய அண்ட வெளி நிறுவனம் ஆகியவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல விண்வெளி ஆய்வுத் திட்டப்பணிகளும் திட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் 2023ஆம் ஆண்டு முதல் படிப்படியாகச் சீன விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வில் பயன்படுத்தப்படும்.