சீன ஊடகக் குழும இயக்குநரின் புத்தாண்டுரை
2023-01-01 17:19:01

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், சி.ஜி.டி.என், சீன வானொலி நிலையம் மற்றும் இணையம் வழியாக வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்குப் புத்தாண்டுரையை நிகழ்த்தினார்.

 

அன்பு நண்பர்களுக்கு:

 குளிர்காலத்தின் வெப்பமான சூரிய ஒளியுடன், இனிமையான எதிர்பார்ப்பு நிறைந்த 2023ஆம் ஆண்டை வரவேற்றுள்ளோம். பெய்ஜிங்கில் இருக்கின்ற நான் உங்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 2022ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடைபெற்ற சீனக் கம்யூனிஸ் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில், சீனப் பாணி நவீனமயமாக்கம் மூலம், சீனத் தேசிய மறுமலர்ச்சி அடைவதற்கான கடமைகளும் வழிகளும் உறுதிப்படுத்தப்பட்டன. புதிய காலகட்டத்தில் பங்கெடுப்பவராகவும், நேரடியாக பார்ப்பவராகவும், பதிவெடுப்பவராகவும், சீன ஊடகக் குழுமம் சிறப்பாக இம்மாநாட்டை பற்றி முழு உலகிற்கும் அறிமுகப்படுத்தியது. கடந்த பத்து ஆண்டுகளில் சீனா படைத்துள்ள சாதனைகளை அறிமுகம் செய்யும் விதமாக, “பயணத்துக்கு வழிக்காட்டல், “10ஆண்டுகால அனுபவம்” உள்ளிட்ட சிறந்த காணொலி படைப்புகள் தயாரிக்கப்பட்டு வெளியானவை. அவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரந்தளவில் பாராட்டு பெற்றுள்ளன.

கடந்த ஓராண்டில், “கருத்து, கலை, தொழில் நுட்பம்” ஆகியவற்றை இணைக்கும் புதிய வழிமுறையை நாம் ஆராய்ந்து, அதிகமான சிறந்த படைப்புகளை உருவாக்க முயற்சி எடுத்து வந்தோம். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி அறிமுகம் செய்த போது, சீன ஊடகக் குழுமம், முன்னேறிய தொழில் நுட்பங்கள் மூலம், ஒலிம்பிக் எழுச்சியை சீனப் பண்பாட்டுடன் ஒன்றிணைத்து உலகிற்கு காண்பித்தது. அந்த விளையாட்டுப் போட்டி பற்றிய சீன ஊடகக் குழுமத்தின் அறிமுகம் மற்றும் பரப்புரை வரலாறு காணாத அளவில் வெற்றி கண்டது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பாஹ் பாராட்டு தெரிவித்தார். மேலும், “சிறந்த படைப்புகளில் உள்ள சீனா”, “கவிதை மற்றும் ஓவியங்களிலுள்ள சீனா” உள்ளிட்ட சிறந்த நிகழ்ச்சிகள் சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்டு ஒளிப்பரப்பப்பட்டன. இந்த நிகழச்சிகளில், சீன நாகரிகம் தலைமுறைத் தலைமுறையாக வளர்ந்து வருவதன் காரணம் பற்றி, கலை மூலம் விளக்கி கூறப்பட்டது. மனித நாகரிகத்தின் அழகு பற்றியும் இந்த நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தவிரவும், வசந்த விழா, நிலா விழா, புத்தாண்டு ஆகியவற்றைக் கொண்டாடும் கலை நிகழ்ச்சிகள், வெளிநாடுகளில் சீனப் பண்பாடு மீதான அதிக கவனத்தை ஏற்படுத்தின. “சீனக் காணொலி விழா”,”சீன-லத்தீன் அன்புறவு”,”சீன-ஆப்பிரிக்க அன்புறவு” உள்ளிட்ட காணொலிகள், வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையே பரிமாற்றத்துக்கான பாலமாக விளங்குகின்றன.

கடந்த ஓராண்டில், முதலாவது உலக ஊடகப் புத்தாக்கக் கருத்தரங்கு, சீன-அர்ஜென்டீனா மக்களிடையே பரிமாற்றம் பற்றிய உயர்நிலை கருத்தரங்கு, சீன-அரபு ஊடக ஒத்துழைப்புக் கருத்தரங்கு முதலிய நிகழ்ச்சிகளை சீன ஊடகக் குழுமம் நடத்தியது. ஊடகக் கூட்டாளிகளின் மண்டல ஒத்துழைப்பு அமைப்புமுறையை தொடர்ந்து ஆழமாக்கி, சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் பரிமாற்றம் மேற்கொண்டபோது, பரஸ்பர நட்புறவும் வலுவடைந்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின், “புதிய கட்டத்தில் உள்ள சீனாவும் உலகமும்”என்ற தலைப்பில், 58 பரப்புரை நடவடிக்கைகள் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், சீனப் பாணி நவீனமயமாக்கம் பற்றி பல்வேறு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்தோம். 2000க்கும் அதிகமான சர்வதேச ஊடக நிறுவனங்களும் இது குறித்து அறிமுகம் செய்தன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலமுறை கூறுகையில், சீனா வரலாற்றின் சரியான பக்கத்திலும் மனித நாகரிக முன்னேற்றப் பக்கத்திலும் உறுதியாக நிற்கிறது. மனித சமூகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் அறிவுகள் மற்றும் அனுபவங்களையும் வழங்கி வருகின்றது என்றார். பரப்புரை திறனே, சர்வதேச ஊடகத்தின் முக்கிய குறியீடாகும். உண்மைத் தன்மை, அனைத்து ஊடகங்களுக்கும் உயிரே ஆகும். கடந்த ஓராண்டில், முழு உலகிலும் செய்திகளைத் திரட்டும் வலைப்பின்னல் அமைப்பை முழுமையாக்கி, சூடான செய்திகளை அறிமுகப்படுத்தும் திறனை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். ஒளிப்பரப்பும் மொழிகளின் எண்ணிக்கை, 44இலிருந்து 68ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 233 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் நமது நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகியுள்ளன. ரஷிய-உக்ரேன் மோதல், தொற்று நோய் பரவல் நிலைமை முதலியவை தொடர்பாக செய்திகள் வெளியிடுவதில், நாங்கள் உண்மைகளில் ஊன்றி நின்று, சர்வதேச சமூகத்துக்கு நியாயமான சீன நிலைப்பாட்டை அறிமுகப்படுத்தி வருகின்றோம்.

புத்தாண்டில், துணிவுடன் முன்னேறி, வேறுபட்ட பார்வை கோணங்களிலிருந்து, புதிய காலகட்டத்தில் சீனாவின் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தி வருகின்றோம். இவ்வாண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10ஆம் ஆண்டு நிறைவாகும். ஊடகம் வழியாக நட்புறவை உருவாக்கி, நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்றி, பொது மதிப்புக்கருத்தை வெளிக்கொணர்ந்து, மனித குலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் விதமாக, ஊடகக் கடமையைச் செயல்படுத்தி வருகின்றோம்.

வசந்தகாலம் தொடங்க உள்ள நிலையில், உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நன்றி.