சீனப் பொருளாதாரம் மீட்சி பெறும் முக்கிய அறிகுறிகள்
2023-01-01 20:34:11

பெய்ஜிங்கின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மீண்டும் காணப்பட்டது. ஷாங்காய் டிஸ்னிரிசார்ட் மற்றும் யுனிவெர்சல் பெய்ஜிங் ரிசார்ட் ஆகிய இடங்களில் பயணிகள் வரிசையில் நின்ற காட்சிகள் மீண்டும் காணப்பட்டது. பெய்ஜிங்கில் வணிக வளாகங்களில் முன்பு போல மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த காட்சி மீண்டும் காணப்பட்டது. இவை, பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட புதிய செய்திகளில் இடம்பெற்றன. சீன மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்புவது, பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவற்றில் சுறுசுறுப்பான காட்சிகள் தொடர்பான அம்சங்கள் பல வெளிநாட்டு பத்திரிக்கைகளின் முக்கிய பக்கங்களில் இடம்பெற்றன.

சீனா, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாற்றிய பிறகு பயன் என்ன? இதில் வெளியுகம் எப்போதும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.  புத்தாண்டு பிறந்த போது, பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட சீனாவின் மாநகரங்களில் மீண்டும் கூட்டம் நிரம்பியுள்ள காட்சிகள், சீனப் பொருளாதாரம் ஆக்கபூர்ரவமாக மீட்சி பெறும் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.

எனவே, புதிய ஆண்டில், சீனப் பொருளாதாரம் மற்றும் சமூகம் விரைவாக மீட்சி அடைந்து வருகிறது. சீன மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.