புதிய ஸ்வீஸர்லாந்து கூட்டாட்சி தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துக்கள்
2023-01-01 19:32:11

புதிய ஸ்வீஸர்லாந்து கூட்டாட்சி தலைவர் பதவி ஏற்ற அலன் பெர்செடுக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி முதல் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அவர் கூறுகையில், சமத்துவம், புத்தாக்கம் மற்றும் கூட்டு வெற்றி என்ற எழுச்சிகளின் தலைமையில், சீன- ஸ்வீஸர்லாந்து உறவு சீராக வளர்ந்து வருகின்றது. இரு தரப்புக்களிடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து, பல்வேறு துறைகளிலான நடைமுறை ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமாகி வருகின்றது என்று தெரிவித்தார்.

மேலும், சீன-ஸ்வீஸர்லாந்து உறவில் உயர்ந்த கவனம் செலுத்துகின்ற நான், அலன் பெர்செடுடன் இணைந்து, இரு தரப்பின் புத்தாக்க நெடுநோக்கு கூட்டாளியுறவுக்கு புதிய முன்னேற்றம் கொண்டு வந்து, பாடுபட்டு, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க பாடுபட விரும்புகின்றேன் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.