உலகிற்கு மேலதிக வாய்ப்புகளை கொண்டு வரும் சீனாவின் வளர்ச்சி
2023-01-01 16:19:07

2023ஆம் ஆண்டின் முதல் நாள், உலக மக்கள் புத்தாண்டைக் கூட்டாக வரவேற்றதோடு, அமைதி மற்றும் வளர்ச்சி மீது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு வெற்றகரமாக நடைபெற்றது. 2022ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு இதுவாகும் என்று வெளிநாட்டு செய்தி நிறுனங்கள் கருதியுள்ளன.இந்த மாநாடு, நாட்டின் கட்டுமானத்தில் புதிய பயணத்தை தொடங்கி வைப்பதாகவும், சீனாவும் உலகத்துடன் இணைந்து அருமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புதிய தொடக்க புள்ளியாகவும் திகழ்கிறது. கூடுதலாக, கடந்த ஆண்டில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தியது. ஒற்றுமை என்ற குறிக்கோள், கொந்தளிப்பான உலகிற்கு நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 120 லட்சம் கோடி யுவானைத் தாண்டக் கூடும். உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக சீனா தொடர்ந்து இடம்பெறுகிறது. இதனிடையில், முழுமையாக உருவாக்கப்பட்ட சீன விண்வெளி நிலையம். பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட முதலாவது சி919 ரக பயணியர் விமானம், முழுமையாக இயங்கியுள்ள பைஹெடான் நீர் மின் நிலையம் ஆகிய வளர்ச்சி சாதனைகள், சீனப் பொருளாதார வளர்ச்சியின்  நெகிழ்வுத்தன்மை,  வாய்ப்பு மற்றும் உயிராற்றலை எடுத்துக்காட்டுகின்றன. சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் மாறவில்லை. மீட்சி பெறும் சீனப் பொருளாதாரம், உலகிற்கு மேலதிக வாய்ப்புகளை கொண்டு வரும் என்று நம்புகின்றோம்.