பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பின் முன்மாதிரி ஆர்.சி.யீ.பி.
2023-01-02 16:55:18

இவ்வாண்டின் ஜனவரி முதல் நாள் வரை, ஓராண்டாக அமலில் உள்ள ஆர்.சி.யீ.பி எனும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கை, எண்ணற்ற தொழில் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது.

ஆசியான் அமைப்பினால் தொடங்கப்பட்ட ஆர்.சி.யீ.பி உடன்படிக்கையில், ஆசியானின் பத்து உறுப்பு நாடுகள், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. மிக அதிகமான மக்கள் தொகை, மிக பெரிய வர்த்தக மற்றும் பொருளாதார அளவு ஆகியவற்றை உள்ளட்டக்கிய தடையற்ற பொருளாதார உடன்படிக்கை ஒன்றாக இது விளங்குகின்றது. அமலுக்கு வந்துள்ள ஓராண்டில், இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள 15 உறுப்பு நாடுகளில், 13 நாடுகள் இதைச் செயல்படுத்த தொடங்கியுள்ளன. தற்போது, உலகப் பொருளாதாரம், உலகமயமாக்கத்துக்கு எதிர்ப்பு, மீட்சி சக்தி பற்றாக்குறை போன்ற அறைக்கூவல்களை எதிர்கொண்டு வருகின்றது. இதனால், ஆர்.சி.யீ.பி உடன்படிக்கை, உலகப் பொருளாதாரத்துக்கு பங்காற்றி வருகிறது என கருதப்படுகின்றது.

இவ்வுடன்படிக்கையில் ஆசியான் அமைப்பு முக்கிய பகுதியாகும். இவ்வுடன்படிக்கை அமலுக்கு வந்த பின், சுங்க வரி குறைப்பு மூலம், இறக்குமதி கட்டணம் குறைப்பு, ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை ஆசியான் நாடுகளுக்கு நன்மைகள் கொண்டு வந்துள்ளன. சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையே, பூஜியம் சுங்க வரி விதிமுறை அமல்படுத்தப்படும் சதவீதம்  65விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இது, ஆசியானின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரிதும் முன்னேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.