இந்தியாவில் வேலைவாய்ப்பில்லா விகிதம் 8.3 விழுக்காடு
2023-01-03 10:23:32

இந்தியாவில் டிசம்பர் மாத கணக்கின்படி வேலைவாய்ப்பில்லா விகிதம் 8.3 விழுக்காடாக உயர்ந்துள்ளதை இந்திய பொருளாதார மதிப்பீட்டு மையத்தின் தரவுகள் வெளிக்காட்டியுள்ளன. கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பில்லா விகிதம் உயர்ந்துள்ளது.

டிசம்பரில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பில்லா விகிதம் 10.09 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது, நவம்பரில் 8.96 விழுக்காடாக இருந்தது. அதேபோல், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பில்லா விகிதம் நவம்பரில் 7.55 விழுக்காட்டில் இருந்து டிசம்பரில் 7.44 விழுக்காடாக குறைந்துள்ளது.