இலங்கை பங்குச் சந்தையில் முன்னேற்றம்
2023-01-03 10:24:40

இலங்கை பங்குச் சந்தையில் 2023ஆம் ஆண்டின் முதலாவது வணிக நாளான திங்கள்கிழமை முடிவில் 51.5 லட்சம் டாலர் வணிகத்துடன் ஏற்றம் கண்டது. ஒட்டுமொத்த சந்தையின் போக்கானது அனைத்து பங்குகள் விலை குறியீட்டின் மூலம் மதிப்பிடப்படுகிறது. இக்குறியீடு 0.23 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதேபோல், எஸ் அன்ட் பி இலங்கை-20 இன் வணிகம் 0.19 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அன்றைய தினம் மட்டும் 13.09 கோடிக்கும் அதிகமான பங்குகள் கைமாறியுள்ளன என்று கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

புதிய ஆண்டில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஈட்டியுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.