தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் தொடர்ந்து சரிப்படுத்தும் சீனா
2023-01-03 18:06:22

கோவிட்-19 தொற்று நோய் நிலைமைக்கிணங்க, அதற்கான கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைச் சீனா தொடர்ந்து சரிப்படுத்தி வருகிறது. சீன மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பயணத்திற்கு உகந்த சூழலை உருவாக்கி, வெளிநாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை நன்கு உத்தரவாதம் செய்யவுள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 3ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

தற்போது சீனாவில் பரவி வரும் கோவிட்-19 திரிபு முன்னதாக ஏற்கனவே உலகின் பல இடங்களில் பரவியுள்ளது. எந்த இடத்திலும் புதிய திரிபு ஏற்படக் கூடும் என்று அண்மையில் பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். எனவே, சீனா மீது சிறப்பு எல்லை நுழைவுத் தடையை மேற்கொள்ள தேவையில்லை. தொற்றுநோய் கட்டுப்பாட்டில் பன்னாடுகள் அறிவியல்பூர்வமாகவும் உகந்த அளவிலாகவும் ஈடுபட வேண்டும். இதனைப் பயன்படுத்தி அரசியல் தந்திரம் நடத்த கூடாது. மக்களிடையில் இயல்பான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை பாதிக்க கூடாது என்று அவர் கூறினார்.