சீனாவைத் தனிமைப்படுத்தும் சூழ்ச்சி வெற்றி பெறாது
2023-01-03 10:38:31

கடந்த ஆண்டு இறுதியில் நோய் தடுப்பு கொள்கையை சீனா மேம்படுத்தியதைத் தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் சமூக ஒழுங்கு சீராக மீட்சி அடைந்து வருகிறது. இதனைச் சர்வதேச சமூகம் பொதுவாக வரவேற்றுள்ளது. இம்மேம்பாடு, உலகப் பொருளாதாரத்துக்குப் பேரூக்கம் அளிக்கும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள், சீனாவில் புதிய வைரஸ் திரிபு ஏற்படக் கூடும் என்று கூறி, சீனாவைச் சேர்ந்த பயணிகளுக்கு நுழைவு தடை விதிப்பதாக அறிவித்தன.

இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் அண்மையில் தொற்று நோய் நிபுணர்களின் கூற்றை மேற்கோள்காட்டி, அமெரிக்க அரசின் முடிவு, அறிவியல்பூர்வமற்றதாகவும், நியாயமற்றதாகவும், தவறாகவும் உள்ளது என்று தெரிவித்தது. குறிப்பிட்ட சில நாடுகள், சீனாவைத் தனிமைப்படுத்தும் வகையில், கூட்டாக நடத்தும் அரசியல் சதிவேலை இது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு மாறாக, பல நாடுகளின் சுற்றுலாத் துறை, சீனாவுக்கான தூதரகங்கள் முதலியவை சீனாவின் சமூக வளையம் மூலம் சீனப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தான் உலகின் முக்கிய விருப்பமாகும். நோய் தடுப்பை அரசியல்படுத்தும் சதிவேலை வெற்றி பெறாது. உலகிற்கு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் ஆற்றல் தேவை.