புத்தாண்டு விடுமுறையில் அதிகம் பயணம் மேற்கொண்ட சீனப் பயணிகள்
2023-01-03 10:44:24

2022ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் நாள் முதல் 2023ஆம் ஆண்டின் ஜனவரி 2ஆம் நாள் வரை, சீனாவின் தேசியப் போக்குவரத்து சீராகவும் ஒழுங்காகவும் இயங்கியது. இக்காலத்தில், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹெபெய், யாங் சி ஆற்றின் முத்து ஆற்றுக்கழிமுகப் பிரதேசம், சொங்சிங், செங்டூவை மையமாகக் கொண்ட மேற்குப் பகுதி முதலிய முக்கிய பகுதிகளில் பயணிகளின் பயணம் தெளிவாக வளர்ந்துள்ளது. இப்பகுதிகளில், தேசிய ரயில்வே மூலம் நாளொன்றுக்கு 50 இலட்சத்து 80 ஆயிரம் பயணிகள்  பயணித்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தின் மூன்று நாள் விடுமுறையின் போது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் நீர்வழிப்பாதை வழியே மொத்தம் 6 கோடியே 14 இலட்சத்து 36 ஆயிரத்து 800 பயணிகளும்  சிவில் விமானப் போக்குவரத்து மூலம் 23 இலட்சத்து 38ஆயிரம் பயணிகளும் பயணித்துள்ளனர்.