மிக கடுமையான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் பிரிட்டன்
2023-01-03 15:51:24

ஜி7 குழுவில் உள்ள வேறு நாடுகளை ஒப்பிடுகையில், பிரிட்டன் 2023ஆம் ஆண்டு மிகக் கடுமையான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று பிரிட்டனின் முக்கிய பொருளியலாளர்களின் கருத்தை மேற்கோள் காட்டி ஃபைனான்ஷியல் டைம்ஸ் ஜனவரி 3ஆம் நாள் தெரிவித்தது.

101 பொருளியலாளர்களிடையே நடத்தப்பட்ட ஆண்டுக் கருத்துக் கணிப்பில்  கோவிட்-19 பரவல் மற்றும் ரஷிய - உக்ரைன் மோதல் ஆகிய காரணங்களால் பிரிட்டனிலேயே விளைவித்துள்ள பணவீக்கம் நீட்டிக்கும் காலம் வேறு நாடுகளை விட மேலும் நீண்டதாக உள்ளது என்று பெரும்பாலான பொருளியலாளர்கள் கருதியுள்ளனர். மேலும், பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2023ஆம் ஆண்டில் தொடர்ந்து குறையும் என்று பொருளியலாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.