மால்வினாஸ் தீவுகள்களின் பிரச்சினையை எதிர்கொள்ளவுள்ள பிரிட்டன்
2023-01-04 11:31:44

2023ஆம் ஆண்டின் முதல் நாள் சர்ச்சைக்குரிய சாகோஸ் தீவுகள்களின் இறையாண்மை தொடர்பான பிரச்சினை குறித்து பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மொரிஷியஸ் தலைமையமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு, மொரிஷியசுக்குச் சாகோஸ் தீவுகள் மீண்டும் திரும்புவதை முன்னேற்றும் செயல்முறை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதைக் குறிக்கின்றது. சாகோஸ் தீவுகள்களின் உரிமைப் பிரச்சினை தீர்ந்த பின்னர் பிரிட்டன் தரப்பு மால்வினாஸ் தீவுகள்களின் பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் அர்ஜென்டினாவுடன் விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் சர்வதேசச் சமூகம் விருப்பம் தெரிவித்துள்ளது. பிரட்டன் தன்னுடைய எதிர்காலத்தை கண்ணியமாக வரவேற்க விரும்பினால், சாகோஸ் தீவுகளைத் திருப்பி அளிப்பது மட்டும் போதாது.

இதனிடையே, கிறிஸ்துமஸ் விழாவின் போது பிரிட்டன் தலைமையமைச்சர் ரிஷி சுனக் மால்வினாஸ் தீவுகள் குறித்து உரை நிகழ்த்துகையில், காலனித்துவ கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு வரலாற்று உண்மைகளையும் சிதைத்தார். இது,  வெளி உலகில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

பிரிட்டன் தலைமையமைச்சர் கிறிஸ்துமஸ் விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வைப் பயன்படுத்தி சர்வதேசச் சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ளார் என்று மால்வினாஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அர்ஜென்டினாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி கார்மோனா கருத்து தெரிவித்தார். அதோடு, 21ஆம் நூற்றாண்டில்  காலனித்துவத்திற்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.