டன்பெல் மலை விவகாரம் - ஐ.நா கூட்டத்துக்கு சீன-ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை
2023-01-04 11:25:26

ஜெருசலேம் டன்பெல் மலை பிரதேசத்திலுள்ள அக்சா மசூதியின் நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்பவை அவரசக் கூட்டம் நடத்த வேண்டுமென சீனாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அண்மையில் கோரியுள்ளன. இக்கூட்டம் 5ஆம் நாள் நடத்தப்படும் என்று கருதப்படுகிறது.

ஜனவரி 3ஆம் நாள் இஸ்ரேலின் வலது சாரி கட்சித் தலைவரும், இஸ்ரேல் தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான இடமார் பன்-க்வீர், டன்பெல் மலை பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார். இதற்கு பாலஸ்தீனத்தின் பல்வேறு பிரிவினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.