அணு உலை கழிவு நீரை கடலில் வெளியேற்றினால் ஜப்பானில் இருந்து இழப்பீடு கோரும் உரிமை பசிபிக் நாடுகளுக்கு உண்டு
2023-01-04 18:30:51

2023ஆம் ஆண்டின் வசந்த காலம் முதல் ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலுக்கு வெளியேற்றுவதாக ஜப்பான் அரசு 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிவித்துள்ளது. இந்த தேதி மேலும் நெருங்கி வரும் நிலையில், ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச சமூகத்திலிருந்து எதிர்ப்பு அலை வீசி வருகிறது. ஜப்பான் அணு உலைக் கழிவு நீரைப் பசிபிக் கடலில் வெளியேற்றினால், அதன் அருகிலுள்ள நாடுகளுக்கு ஜப்பானில் இருந்து இழப்பீடு கோரும் உரிமை உண்டு என்று ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டினர்.

ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து 13 லட்சம் டன் கொண்ட கழிவு நீரைக் கடலில் கலக்கும் நிலையில், பசிபிக் கடற்கரையில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் கடலின் சுற்றுச் சூழலையும் மதிப்பிடப்பட முடியாத அபாயத்தைக் கொண்டு வரும். அதன் விளைவாக, மாற்றப்பட முடியாத பாதிப்பு ஏற்படும்.

கடல் என்பது மனிதகுலத்தின் கூட்டு சொத்து மற்றும் தாயகமாகும். அணு உலை கழிவு நீரை கடலுக்கு வெளியேற்றுவது ஜப்பான் நாட்டின் சொந்த விஷயம் மட்டும் அல்ல. தற்போது, ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரைக் கடலில் திறந்து விடுவது குறித்து சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் விரிவான மதிப்பீடு செய்து வருகிறது. வரலாற்றில் ஜப்பானின் தவறுகள், அண்டை நாடுகளுக்குக் கடும் பேரிடரை ஏற்படுத்தியது. இன்றைய காலத்தில் மற்றொரு வரலாற்று தவற்றை ஜப்பான் ஏற்படுத்துமா?