இந்தியாவில் 108ஆவது அறிவியல் மாநாடு
2023-01-04 11:23:11

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராஷ்டிரசந்த் துகடோஜி மகாராஜ் நாக்புர் பல்கலைக்கழகத்தில் 108ஆவது இந்திய அறிவியல் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை வரை நடைபெறும் இம்மாநாட்டின் கருப்பொருளாக பெண்களுக்கு அதிகாரமளித்தளுடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் பங்குபெறும் விருந்தினர்கள் உயர்கல்வியில் ஆசிரியர் பணி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையில் அதிக பெண்களை ஈடுபடச் செய்தல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பெண்கள் சம வாய்ப்பைப் பெறுதல், பொருளாதாரத்தில் பங்கெடுப்பு உள்ளிட்டவை பற்றி விவாதிக்க உள்ளனர்.

இம்மாநாடு நடைபெறும் நாள்களில், அறிவியல் துறை மீதான குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரிக்கும் விதம் குழந்தைகள் அறிவியல் கூட்டமும் நடத்தப்படும் என்று தலைமை அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.