அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை தலைவர் தேர்தலில் சர்ச்சை
2023-01-04 10:10:09

அமெரிக்காவின் 118ஆவது நாடாளுமன்றக் கூட்டம் ஜனவரி 3ஆம் நாள் துவங்கியது. அன்று நடைபெற்ற 3 சுற்று பிரதிநிதிகள் அவை தலைவர் தேர்தலில் யாரும் வெற்றி பெறவில்லை. கடந்த 100 ஆண்டுகளில் பிரதிநிதிகள் அவை தலைவர்கள் முதல் சுற்று தேர்தலிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது பிரதிநிதிகள் அவை, அரசியல் தேக்க நிலையில் சிக்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களால் பதவியை ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதிநிதிகள் அவை தலைவருக்கான மறுதேர்தல் 4ஆம் நாள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.