48 மணிநேர கோவிட்-19 சோதனையின் எதிர்மறை முடிவுடன் சீனாவுக்கு நுழையலாம்
2023-01-04 18:07:36

ஜனவரி 8ஆம் நாள் முதல் சீனாவுக்கு வருபவர்கள் பயணத்துக்கு முந்தைய 48 மணிநேரங்களுக்குள் கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள வேண்டும். எதிர்மறை சோதனை முடிவு கொண்டால் தான், சீனாவுக்கு வர முடியும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 4ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சீனா மற்றும் வெளிநாட்டு மக்கள் பயணத்திற்கான தற்காலிக நடவடிக்கையின்படி, ஜனவரி 8ஆம் நாளுக்கு பின்பு, சீனாவுக்கு வருபவர்கள், வெளிநாட்டிலுள்ள சீனத் தூதரகத்தில் சுகாதார குறியீட்டை விண்ணப்பிக்க தேவையில்லை. அதன் முடிவு சுங்க துறைக்கான ஆரோக்கிய அறிவிப்பு அட்டையில் சேர்க்க வேண்டும். கோவிட்-19 சோதனை முடிவு நேர்மறையாக இருந்தால், எதிர்மறையாக மாறிய பிறகு, சீனாவுக்கு வர முடியும் என்று  அவர் மேலும் கூறினார்.