தேசிய அருங்காட்சியகத்தில் சீன-பிரிப்பைன்ஸ் அரசுத் தலைவர்களின் மனைவிகள் பயணம்
2023-01-05 11:14:38

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியார் பெங்லியுவான், 4ஆம் நாள் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸின் துணைவியார் லிஷாவுடன் 4ஆம் நாள் பிற்பகல் சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது பெங்லியுவான் கூறுகையில், அண்டை நாடுகளுடன் அன்பாகப் பழகி, நல்லிணக்கம் மற்றும் கூட்டுச் செழுமையைப் பெறுவதென்பது சீனா பின்பற்றி வரும் நடைமுறையாகும். அதோடு, இரு நாட்டு மக்களும், பாரம்பரிய நட்பை வெளிக்கொணர்ந்து, சீன-பிரிப்பைன்ஸ் உறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்து வைக்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அருங்காட்சியகத்திலுள்ள கலைநயமிக்க பொருட்களை வெகுவாகப் பாராட்டிய லிஷா, இரு நாட்டு மக்கள் பட்டுப்பாதை எழுச்சியைக் கையேற்றி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.