ரஷியா மீதான தடையால் சிக்கலுக்குள்ளாகும் ஐரோப்பா நிலைமை
2023-01-05 11:22:34

அமெரிக்காவைப் பின்பற்றி ரஷியாவின் மீது 9 சுற்று தடை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்பு  தீவிரமாகி வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவரப் பணியகம் டிசம்பர் திங்களில் வெளியிட்ட புதிய தகவலின்படி, 2022ஆம் ஆண்டின் முதல் 10 திங்கள் காலத்தில், ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் அளவு குறைவதற்குப் பதிலாகப் பெரிதும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு அளவு 42.6 விழுக்காடு அதிகமாகும்.

பல சுற்று தடை நடவடிக்கைகள் ஐரோப்பிய தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. சந்தை இழப்புடன்,எரியாற்றல் விலை உயர்ந்து வருவதால் உற்பத்திச் செலவும் இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது.

இதனிடையில், 2023ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி பற்றி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில், எரியாற்றல் நெருக்கடி மேலும் மோசமாகி மாறினால், ஐரோப்பா மிகச் சிக்கலமான மற்றும் கடினமான பொருளாதார நிலைமையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.