2022 தலைசிறந்த ஊடக வசதி விருது - பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
2023-01-05 11:08:23

சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் சம்மேளனம் வழங்கிய தகவலின்படி, உலகம் முழுவதிலுள்ள செய்தியாளர்களின் வாக்கெடுப்பு மூலம் 2022ஆம் ஆண்டில் விளையாட்டுப் போட்டிக்கான தலைசிறந்த ஊடக வசதி விருது தேர்ந்தெடுக்கப்பட்டது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒட்டுமொத்த விளையாட்டுப் பிரிவின் முதலிடம் பெற்றுள்ளது. இப்போட்டியின் ஊடக மையம் தரமிக்க சேவையைச் சிறப்பாக வழங்கியதாகச் சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் சம்மேளனம் தனது இணையதளத்தின் வழி பாராட்டு தெரிவித்துள்ளது.

தனி விளையாட்டுப் போட்டிகளின் ஊடக வசதிகளுக்கான தேர்வில், கத்தார் உலகக் கால்பந்து போட்டி, புடாபெஸ்ட் உலகச் சாம்பியன் நீச்சல் போட்டி, பிரிட்டனில் நடைபெற்ற மகளிர் கால்பந்து ஐரோப்பியச் சாம்பியன் பட்டப் போட்டி ஆகியவை முதல் மூன்று இடங்கள் பிடித்துள்ளன.