அறிவியல் ஆதாரமற்ற அமெரிக்காவின் செயல்
2023-01-05 10:48:21

சீனாவில் கரோனா வைரஸின் புதிய திரிபு, வைரஸ் பரவலை அதிகரிக்கக்கூடும் என்ற சாக்குப்போக்கில், ஜனவரி 5ஆம் நாள், சீனப் பயணிகள் வருகையை அமெரிக்கா கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால் உண்மையில் தற்போது சீனாவில் பரவி வருகின்ற BA.5 திரிபானது, கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் பரவிய ஒன்றாகும். அண்மையில் ஷாங்காய் மற்றும் ஹாங்சோ நகரத்தில் கண்டறியப்பட்ட XBB.1.5 திரிபு, தற்போது அமெரிக்காவில் பெருமளவில் பரவி வருகிறது. ஆகவே, அமெரிக்காவின் கூற்று உண்மையைப் புறக்கணித்து, அறிவியலுக்குப் புறம்பாகக் கட்டியமைக்கப்பட்ட கட்டுக்கதையாகும்.

கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருவதுடன், எல்லா இடங்களிலும் புதிய திரிபுகள் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது. சீன மக்கள் வருகையை மட்டும் கட்டுப்படுத்துவதுற்கு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக,  மக்களின் உயிருமே முதன்மை என்ற கருத்தைக் கொண்டு, வைரஸ் பரவல் தடுப்புப் பணியைச் சீனா மேம்படுத்தி, உலகின் வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.